களவாணி 2 படத்தின் தகவலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:49 IST)
‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணம், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஒன்று, மாதவனை வைத்து அவர்  இயக்கும் படம். இன்னொன்று, ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம்.
பிக்பாஸ் ஓவியா இப்போது தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக் கன்னி. அவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் காஞ்சனா படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஓவியா தமிழில் முதன்முதலாக நடித்த களவாணி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறதாம். அதற்கான லோகோ மற்றும் தகவலை  சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் சற்குணம் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய லோகோவை, ஓவியா வெளியிட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்