லால் சலாம் தோல்வி… இயக்குனர் ஐஸ்வர்யா மேல் விஷ்ணு விஷால் அதிருப்தி!

vinoth
புதன், 21 பிப்ரவரி 2024 (10:56 IST)
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மொத்தத்தில் ரஜினி கேரியரில் மோசமான ஒரு தோல்வி பட லிஸ்ட்டில் லால் சலாம் இணைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் தோல்விக்கு காரணம் லைகா நிறுவனம் படத்துக்கு சரியாக விளம்பரம் செய்யாததுதான் காரணம் என இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நினைக்கிறாராம். இதே எண்ணத்தை லண்டனில் இருக்கும் லைகா அதிபர் சுபாஷ்கரனுக்கும் அவர் தெரியப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேல் கோபமாக இருக்கிறாராம். அதற்குக் காரணம் தன்னிடம் 45 நாட்கள் கால்ஷீட் என சொல்லிவிட்டு 90 நாட்கள் வரை ஷூட் செய்து இழுத்தடித்தாராம். அவரும் ரஜினி படம் என்பதால் பொறுத்துக்கொண்டு நடித்தாராம். ஆனால் படம் ப்ளாப் ஆனதில் இப்போது இயக்குனர் மேல் அதிருப்தியில் இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்