விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (14:56 IST)
முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’கட்டா குஸ்தி’. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் விஷ்ணு விஷாலோடு இணைந்து தயாரிக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இதையடுத்து இந்த படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில்தான் தனுஷின் வாத்தி படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்