2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் வெளியாகி பிரபலமான சீரிஸ் பிரேக்கிங் பேட். அதன் பின்னர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு உலகம் முழுவதும் அந்த சீரிஸ் பிரபலமானது. தமிழ்நாட்டிலும் இந்த சீரிஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது. தமிழ் சினிமாவிலேயே பல இயக்குனர்கள் அந்த தொடருக்கு ரசிகர்களாக உள்ளனர்.
இதனால் இப்போது அந்த வீட்டை மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட அந்த வீட்டின் உரிமையாளர் முடிவெடுத்துள்ளாராம். அவர் வீட்டுக்கு விலையாக இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாய் விலை நிர்ணயித்துள்ளாராம். வீட்டை விற்பது குறித்து பேசியுள்ள உரிமையாளர் குயிட்டனா “இந்த வீட்டை சுற்றுலாத் தளமாகவோ அல்லது அருங்காட்சியகமாகவோ மாற்றிக்கொள்ளலாம். நான் இந்த வீட்டில் இருந்து சிறந்த நினைவுகளை எடுத்துச் செல்ல விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.