நாளை நடக்கிறது அஜித் & கோ பங்கேற்கும் ’24 H’ ரேஸ்… தயாரான AK!

vinoth

வெள்ளி, 10 ஜனவரி 2025 (11:22 IST)
நடிகர் அஜித்குமார் சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார். இந்த  அணியின் மற்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும், முதன்மை ஓட்டுனராகவும் அஜித் செயல்பட,  ஃபேபியன் ட்யூபிக்ஸ், மேத்யூ டெய்ட்ரி மற்றும் கேம் மெக்லார்ட் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்நிலையில் துபாயில் ரேஸுக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்ட போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆனால் அவர் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவருக்குப் பெரிய அடி. அடுத்த நாளே அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நாளை அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும் ‘24H’ ரேஸிங் நடக்க உள்ளது. அதற்குத் தயாராகியுள்ள அஜித் மற்றும் அவரது அணி உறுப்பினர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் போட்டிக்குத் தயார் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்