ரண்வீர் வழியில் நிர்வாண போஸ் கொடுத்த விஷ்ணு விஷால்!

ஞாயிறு, 24 ஜூலை 2022 (15:20 IST)
ரண்வீர் வழியில் தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ரண்வீர் சிங் பாலிவுட் பட உலகில் தனித்தன்மையுடன் எதையாவது வித்தியாசமாக செய்து காட்ட வேண்டும் என்ற துடிப்புடன் வலம் வரும் நட்சத்திரம்.  சமீபத்தில் ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்துக்கு ரண்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த காட்சி பிரபலமானது. சமூக ஊடகங்களில் அது சர்ச்சையாக பேசப்பட்டாலும் அது ரண்வீர் திரையுலகில் மேலும் பிரபலம் அடையவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவியது.

இப்போது ரண்வீர் வழியில் தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண படத்துக்கு போஸ் கொடுத்து அதை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
ஒரு படத்தில் மெத்தையில் நிர்வாண கோலத்தில் இடுப்புப் பகுதிக்கு கீழே வெள்ளை போர்வையை போர்த்தியபடி விஷ்ணு விஷால் தோன்றியிருக்கிறார்.
 

சரி.... நானும் டிரெண்டில் இணைகிறேன். பின்குறிப்பு: புகைப்பட கலைஞர் எனது மனைவியாக இருக்கும்போது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படங்களை பகிர்ந்த சில நிமிடங்கலில் அதற்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்தன.

இப்படியொரு படத்துக்கு போஸ் கொடுக்க துணிச்சல் வேண்டும் என சிலர் கருத்துகளை பதிவிட்டாலும், அவரது செயலை கடுமையாக விமர்சித்து மீம்களை சிலர் வெளியிட்டுள்ளனர்.

விஷ்ணு தற்போது செல்ல அய்யாவு இயக்கத்தில் தனது இரு மொழி படமான கட்ட குஸ்தியின் படப்பிடிப்பில் பங்கெடுத்து வருகிறார். சென்னையில் இந்த படத்துக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் வெளியாகவுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் ரண்வீர் துருக்கிய மெத்தையில் படுத்தபடியும் அமர்ந்தபடியும் நிர்வாணமாக உள்ள தமது படங்களை பகிர்ந்தபோது அவருக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் சிலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்