விஷாலின் அடுத்த பட இயக்குனர்-டைட்டில் அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (11:00 IST)
விஷால் நடித்த 'இரும்புத்திரை' சமீபத்தில் வெளிவந்து சூப்பர் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படமான 'சண்டக்கோழி 2' மிகவிரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
 
இந்த படத்தை வெங்கட்மோகன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விஷால் ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ள்து. இந்த படத்திற்கு 'அயோக்யா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
 
இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் விஷால், ஏ.ஆர்.முருகதாஸ், கலைப்புலி எஸ்.தாணு, பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டு படக்குழுவினர்களை வாழ்த்தினர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்