தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் லியோ.
இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் இப்பட வெற்றி விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.
லியோ திரைப்படம் உலகளவில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் லியோ உள்ளது.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இப்போது லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 23 ஆம் தேதி லியோ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் அனிருத்தின் இசையில் விஷ்ணுவின் வரிகளில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான் என்ற பாடல் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
All we want to say is 'Annen varaar vazhi vidu' ❤️