ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கங்கனா ரனாவத்

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (18:25 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் ஃபேஷன், குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ், ஜான்சி ராணி, தமிழில் தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து சந்திரமுகி2  படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை அடுத்து மாதவனுடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அதே இடத்தில் ரஜினி பட ஷூட்டிங்கும் நடந்த நிலையில், கங்கனா ரனாவத், ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து கங்கனா ரணாவத் தன் வலைதள பக்கத்தில் பதிவிடும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினியை  God Of Indian Cinema  தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்