கும்பகோணத்தில் தொடங்கிய கார்த்தியின் அடுத்த பட ஷூட்டிங்!

சனி, 18 நவம்பர் 2023 (07:55 IST)
கடந்த 2018  ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 96. ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்தது.

அதையடுத்து பிரேம் குமார் கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஆனார். கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி தாடி வளர்த்துள்ளார் கார்த்தி. இதற்கிடையில் அவர் நடித்து வந்த நலன் இயக்கும் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம் படத்தை நடித்து முடித்த பின்னர் மீண்டும் நலன் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்