பிரபல ஓடிடியில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம்?

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (09:34 IST)
விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14 ஆம் தேதி தெலுங்கிலும் வெளியானது. உலகம் முழுவதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பெரிய அளவில் சாதித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

அதிகாரப்பூர்வமாக உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி 40 நாட்கள் கழித்து தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்