தனுஷ் 50 படத்துக்கு இசையமைக்கிறாரா ஏ ஆர் ரஹ்மான்?

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (09:27 IST)
தமிழ் சினிமாவின் திறமைமிகு நடிகர்களில் ஒருவரான  தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார்.  இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படம் தனுஷின் 50 ஆவது படமாக அமைய உள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்க இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்