துணிவு படம் பார்த்துட்டு விமர்சனம் சொன்ன இந்திய கிரிக்கெட் வீரர்!

சனி, 18 பிப்ரவரி 2023 (08:30 IST)
அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.

சமீபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அஜித் படங்களிலேயே மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடி தொடர்பான கதைக்களம் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

இதையடுத்து திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள் கடந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து துணிவு திரைப்படம் இந்திய அளவில் நம்பர் 1 படமாகியுள்ளது. அதே போல துணிவு திரைப்படத்தின் மலையாளம் மற்றும் தெலுங்கு வெர்ஷனும் டாப் 10 ல் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் “துணிவு படம் பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?” என்ற கேள்விக்கு “சூப்பர்” என்று பதிலளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்