தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகின்றன- பாஜக பிரமுகர் கண்டனம்!

சனி, 18 பிப்ரவரி 2023 (09:19 IST)
ஆனால் அவ்வாறு தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியிடும்போது இடம்பெறுகின்றன என்று பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு, விதிமீறல்கள் உள்ள காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டு, அதன்பிறகே திரையரங்குகளில் படங்கள் வெளியாகின்றன. சில நாட்கள் கழித்து அதே திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. ஆனால், திரையரங்கில் வெளிவந்தபோது, நீக்கப்பட்ட காட்சிகள், வசனங்களை எல்லாம் அதில் இணைத்து வெளியிடுகின்றனர்.

சமீபத்தில், ஒரு பிரபல நடிகர் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படத்தில் இடம்பெறாத சில காட்சிகளும், வசனங்களும் ஓடிடி திரையில் வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதில், அந்த பிரபல நடிகரே தரக்குறைவான வார்த்தைகளை உச்சரிப்பது கண்டிக்கத்தக்கது. இது சமுதாயத்துக்கு தீங்கிழைக்கும் செயலாகும். இணைய வழி திரைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது திரைத்துறையினரின் கடமை.” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான துணிவு திரைப்படத்தைதான் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்