ரூ.50 கோடி லாபம் சம்பாதித்து கொடுத்த விஜய்சேதுபதி படம்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (22:15 IST)
கோலிவுட் திரையுலகில் பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும். இல்லையென்றால் அந்த தயாரிப்பாளர் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்.



 
 
இந்த நிலையில் வெறும் ரூ.10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட விஜய்சேதுபதி, மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.57 கோடி வசூல் செய்துவிட்டதாம். விவேகம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.60 கோடியை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
எனவே இந்த படத்தின் லாபம் முழுதாக ரூ.50 கோடி என்று தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் கூறுகின்றனர். ஒரு படத்தின் உண்மையான வெற்றி இதுதான் என்றும், ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்து ரூ.150 கோடி வசூல் செய்தாலும் இந்த வெற்றிக்கு ஈடாகாது என்றும் படக்குழுவினர் தைரியமாக கூறி வருகின்றனர். வாழ்த்துக்கள் விஜய்சேதுபதி!
அடுத்த கட்டுரையில்