விஜய் பட வேலைகளை துவங்கிய முருகதாஸ்!!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (22:00 IST)
முருகதாஸ் இயக்கத்தில் தற்போது ஸ்பைடர் படம் உருவாகியுள்ளது. இதில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 


 
 
விஜய் தற்போது மெர்சல் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பில் உள்ளார். மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாய் நடைபெற்றது.
 
இதன் பின்னர், தங்களது அடுத்த படத்திற்காக விஜய், முருகதாஸ் இணையயுள்ளனர். துப்பாக்கி, கத்தி பட வெற்றிகளை தொடர்ந்து இந்த படத்திலும் வெற்றி கூட்டணி தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இன்று துவங்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். 
அடுத்த கட்டுரையில்