தமிழ் சினிமாவில் சாமி, ஆறு, சிங்கம், தாமிரபரணி என வரிசையாக பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஹரி. சமீபகாலமாக அவருக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன சூர்யா திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் அவர் அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கினார்.
கடைசியாக விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரத்னம் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் அவரின் கேரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து அவர் புதிதாக படங்கள் எதுவும் இயக்காமல் உள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. விரைவில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.