சீதாராமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் துல்கர் சல்மான். அதனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகின்றன. அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பீரியட் படமாக உருவாகியுள்ள வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடித்திருந்தார்.