இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று இன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் என்பவர் காரிலிருந்து குதிக்கும்போது தவறி விழுந்ததாகவும், அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் கார் சம்மந்தமான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்குவதில் மோகன்ராஜ் வித்தகர் என்ற பெயர் பெற்றவர். இந்நிலையில் அவரின் மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதில் “ஸடண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் அண்ணனின் மறைவு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. வாழை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் லாரியைக் கவிழ்த்து எல்லோரையும் கலங்கடித்த நாட்களை இப்போது நினைத்துக் கொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் எப்போதும் நினைவில் இருப்பீர்கள்” என அஞ்சலி செலுத்தியுள்ளார்.