ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகளில் தற்போது வெங்கட் பிரபு ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இந்த படம் டைம் டிராவல் ஜானரில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றிய அப்டேட் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார் வெங்கட்பிரபு. அதில் “சிவகார்த்திகேயனும் நானும் இணையும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்” எனக் கூறியுள்ளார்.