மாஸ்டர் படப்பிடிப்பில் படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்த விஜய் சேதுபதி

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (21:20 IST)
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முதல் முதலாக ’மாஸ்டர்’ படத்தில் இணைந்து நடிக்கின்றனர். விஜய் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டபோது விஜய்சேதுபதி திடீரென விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம்
 
வழக்கமாக விஜய்சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம். அதேபோல விஜய்யையும் கட்டிப்பிடித்து எதிர்பாராதவிதமாக முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த சம்பவத்தை பார்த்த படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்  இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விஜய்சேதுபதிக்கு நன்றி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும் என்றும் தமிழ் சினிமாவில் இதுவரை வராத அளவுக்கு இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்