தற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் தான் இவருக்கு இஸ்லாமிய முறைப்படி சீமந்தம் நடைபெற்றது. அதையடுத்து கடந்த டிசம்பர் 28ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார். சமீபத்தில் கூட குழந்தையின் பெயர் சூட்டு விழா விஜய் டிவியில் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷ்ன் மற்றும் ரஞ்சனியை பிரபல இணையதள தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்திருந்தது. அதில் அறந்தாங்கி நிஷா பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுங்கள் என கேட்டதற்கு ரக்ஷன், " ஊரில் இருந்து வந்து ஒருவர் இந்த அளவுக்கு பிரபலமாவதெல்லாம் அவ்வளவு எளிதான விஷயமில்லை. குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி வரை ஷூட்டிக் வந்தாங்க.. அந்த குழந்தையும் இப்போ விஜய் டிவி ஷூட்டிங்கில் தான் வளருகிறது என கூறி சிரித்தார்.