பிகில் படத்தை பார்த்துக் கொண்டே சிகிச்சைப் பெற்ற சிறுவனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (17:48 IST)
சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த 10 வயது சசிவர்ஷன் என்ற சிறுவன் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கீழே விழுந்துள்ளார். இதனால் நெற்றியில் அவருக்கு பலமானக் காயம் பட்டது. அதனால் அவருக்கு தையல் போடவேண்டிய சூழல் உருவானது. ஆனால் சிறுவனோ வலியில் தையல் போட அனுமதிக்காமல் அடம் பிடித்துள்ளான்.
 
அப்போது அவனுக்குப் பிடித்த நடிகரான விஜய்யின் பிகில் படத்தை செல்போனில் போட்டுக்காட்டவும், அதைப் பார்க்க ஆரம்பித்துள்ளான். பின்னர் சிறுவனுக்கு மயக்க ஊசி செலுத்தி தையல் போட்டு முடித்துள்ளனர் மருத்துவர்கள். இது செய்தியாக வெளியாகி அந்த குட்டி தளபதி ரசிகன் விரைவில் குணமாக விஜய் ரசிகர்கள் கடவுளிடம் வேண்டினர். இந்நிலையில் நடிகர் விஜய் அந்த சிறுவனுக்கு உடல்நிலை சரியானதும் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக விஜய் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர் . 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்