ரகசியமாக நடந்த விக்ரம் படத்தின் போட்டோஷூட்! கலந்துகொண்டது யார் யாரெல்லாம் தெரியுமா?

வெள்ளி, 9 ஜூலை 2021 (18:10 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் மீது ஏராளமான எதிர்பார்ப்பு உள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்துக்காக கமல் மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொண்ட போட்டோ ஷூட் ரகசியமாக நடந்துள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்