இவ்வளவு பெரிய வீட்டை வாங்கியது பயமாக இருக்கிறது - புலம்பும் விஜய் தேவர்கொண்டா!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (12:15 IST)
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் உலக அளவில் பேமஸ் ஆன நடிகர் விஜய் தேவரகொண்டா அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா , நோட்டா , டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தார்.அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப்  நடிகர்களுக்கும் இணையாக வளர்ந்து வருகிறார்
இந்நிலையில் இவர் தற்போது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் மிகப் பெரிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. அந்த வீட்டின் மதிப்பு சுமார் 15 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது அவரே தனது சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதாவது “மிகப் பெரிய வீட்டை வாங்கி விட்டேன். ஆனால், அது பார்ப்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது. அந்த பயத்தைப் போக்க எனது அம்மா தேவைப்படுகிறார்” என்று கூறி பதிவிட்டுள்ளார். 

அவரின் இந்த பதிவிற்கு " உங்களது உழைப்பையும் வளர்ச்சியையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம் என ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்