’அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’டியர் காம்ரேட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் 8 படங்களில் மட்டுமே நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமான விஜய்தேவரகொண்டாவின் ஒன்பதாவது படம் தற்போது உருவாகி வருகிறது. கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் என்ற நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு ’வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்து டைட்டில் போஸ்டரையும் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 4 நடிகைகள் நடிக்க உள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேத்ரின் தெரசா மற்றும் இசபெல்லி லியட் ஆகிய நால்வரும் விஜய்தேவரகொண்டா உடன் டூயட் பாடி ஆட்டம் போட இருப்பதாகவும், இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ரொமான்ஸ் படம் என்றும், டைட்டிலுக்கு பொருத்தமாகவே படம் முழுவதும் லவ் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்