மீண்டும் இணையும் லைகர் கூட்டணி… டோலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (10:10 IST)
நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை நடிகையாக அறிமுகம் செய்தார் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர்.

விஜய் தேவாரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதே கூட்டணியில் அடுத்ததாக ஜன கன மன என்ற படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் தொடங்க உள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்