மாறுவேடத்தில் சிக்கிய விஜய்: பழனியில் தரிசனம்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (16:14 IST)
நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு இளைஜர்கள் போரட்டத்தில் கலந்துக் கொண்டதை அடுத்து தற்போது பழனி கோயிலில் மாறுவேடத்தில் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். 


 

 
நடிகர் தற்போது அதிகமாக பொது இடங்களில் உலா வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இளைஞர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு போரட்டத்துக்கு முகத்தில் கைக்குட்டை கட்டிக்கொண்டு வந்து கலந்துக்கொண்டார்.
 
அதைத்தொடர்ந்து தற்போது அவர் மாறுவேடத்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த புகைப்படத்தில் விஜய் காவி வேட்டி அணிந்துள்ளார். காவி துண்டு மூலம் அவரது முகத்தை மறைத்துள்ளார். இருந்தும் அது விஜய் என்பது தெளிவாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்