ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

vinoth

செவ்வாய், 20 மே 2025 (08:27 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். அவர் இசையமைக்கும் குத்துப் பாடல்கள் ரசிகர்களுக்கு வேற லெவல் ‘vibe’ கொடுத்தன.

இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது அவரது சக்தி திருமகன் மற்றும் மார்கன் ஆகிய இரு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இதையடுத்து விஜய் ஆண்டனி, அடுத்து தான் நடிக்கும் படத்தை இயக்க சமீபத்தில் ரிலீஸான ‘ஜெண்டில்வுமன்’ படத்தின் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமனை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படம் ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாக உள்ளதாக சொல்லப்பட்டது.

இதை உறுதிபடுத்துவது போல சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்துக்கு “Lawyer” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘குடும்பஸ்தன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் ஒளிப்பதிவு செய்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்