தனுஷ் போல சகோதரி மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் விஜய் ஆண்டனி!

vinoth

திங்கள், 24 மார்ச் 2025 (14:12 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். அவர் இசையமைக்கும் குத்துப் பாடல்கள் ரசிகர்களுக்கு வேற லெவல் ‘vibe’ கொடுத்தன.

இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.

தற்போது அவர் சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். ககனமார்க்கன் படத்தை பிரபல படத்தொகுப்பாளரான லியோ ஜான் பால் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் நடிகராக அறிமுகமாகிறாராம். நெகட்டிவ் தன்மை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்