பாகிஸ்தான் மக்கள் அமைதி, மகிழ்ச்சியை விரும்புபவர்கள்: விஜய் ஆண்டனி கருத்தால் பரபரப்பு..!

Siva

ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (14:16 IST)
பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம்மைப் போலவே அமைதியையும் மகிழ்ச்சியையும் விரும்புபவர்கள் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் மீது இந்தியர்களுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
’பாகிஸ்தானை பழிவாங்க வேண்டும்’, ’பாகிஸ்தான் மீது போர் தாக்குதல் நடத்த வேண்டும்’ என பல சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
 
ஆனால் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் ’பாகிஸ்தான் மக்களும் நம்மை போன்றவர்களே’, என்ற் கூறி,  ’காஷ்மீரில் உயிரிழந்த சகோதரிகளுக்கு அவர்களது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.
 
’பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் அங்கு உள்ள பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்’, ’பாகிஸ்தான் மக்களும் நம்மை போலவே அமைதியையும்  மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்’, ’வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்’ என்று அவர் பதிவு செய்துள்ளார்.
 
அவரது பதிவுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் பதிவாகி வருகிறது என்பதும், குறிப்பாக எதிர்மறை கருத்துக்கள் அதிகமாக பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்