தற்போது அவர் சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். ககனமார்க்கன் படத்தை பிரபல படத்தொகுப்பாளரான லியோ ஜான் பால் இயக்குகிறார். சக்தி திருமகன் படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். இதையடுத்து விஜய் ஆண்டனி, அடுத்து தான் நடிக்கும் படத்தை இயக்க சமீபத்தில் ரிலீஸான ஜெண்டில்வுமன் படத்தின் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமனை ஒப்பந்தம் செய்துள்ளாராம். இந்த படம் ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.