விஜய் ஆண்டனியின் படத்துக்கு 40 கோடி வியாபாரமா?

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (14:54 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் கொலை என்ற படத்துக்கு சுமார் 40 கோடி ரூபாய் சம்பளம் பேசப்படுவதாக சொல்லப்படுகிறது.

விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த எல்லா படங்களையும் விட அவர் நடித்து முடித்துள்ள கொலை என்ற திரைப்படம் இப்போது ஹாட் டாப்பிக்காகியுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 40 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லபடுகிறது. படம் நெட்பிளிக்ஸில் வெளியிடவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்