இயக்குனர் தாமிராவின் பணியை முடிக்கும் விஜய் மில்டன்!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:14 IST)
இயக்குனர் தாமிரா சத்யராஜ் நடிப்பில் ஒரு வெப் சீரிசை இயக்கி வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் தாமிரா வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வந்தார். இவர் ஏற்கனவே ரெட்டைசுழி மற்றும் ஆண்தேவதை ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் நகைச்சுவை குடும்ப சென்டிமென்ட் ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த சீரிஸில் சத்யராஜுடன் சீதா மற்றும் சுகன்யா ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

ஆனால் அந்த சீரிஸை இயக்கி வந்த போதே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சீரிஸீல் இன்னும் ஒரு 10 நாள் படப்பிடிப்பு முடிய வேண்டியுள்ளது. அதை இயக்குனர் விஜய் மில்டன் பொறுப்பேற்று இயக்கி முடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்