சர்வதேச ரிலீஸ் ப்ளான் செய்யும் ஹன்சிகாவின் அடுத்த படம்!

திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:45 IST)
நடிகை ஹன்சிகாவின் 105 மினிட்ஸ் சர்வதேச அளவில் ரிலிஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹன்சிகா நடித்த 50-வது திரைப்படமான மஹா விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய வேடத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஹன்சிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் அடுத்த படம் தெலுங்கில் உருவாக உள்ளது.

இந்த படத்தை பற்றிய அப்டேட் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படம் ஒரே ஷாட்டில் ஹன்சிகா மட்டும் நடிக்க உருவாக உள்ளதாம். இந்த படத்துக்கு 105 மினிட்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலக சினிமா ரசிகர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவை தவிர சைனா மற்றும் கொரியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்