சென்னை,ஹைதராபாத் & மும்பை – அடுத்தடுத்து பறக்கும் விஜய் 65 படக்குழு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:40 IST)
ஜார்ஜியாவில் இப்போது படப்பிடிப்பை நடத்திவரும் விஜய் 65 படக்குழு அடுத்தடுத்தடுத்து படப்பிடிப்புகளை நடத்தி முடிக்க உள்ளதாம்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் அப்டேட் நேற்று முன் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த படத்தின் நாயகனாக விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். இதையடுத்து இப்போது இயக்குனர் நெல்சன் ஜார்ஜியாவில் விஜய் உள்ளிட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து 100 பேர் கொண்ட குழு ஜார்ஜியாவுக்கு சென்றது. அவர்களுக்கு சென்னையிலும் ஜார்ஜியாவிலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்படி இருந்தும் அந்த குழுவில் இருவருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனாலும் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த மாத இறுதியில் அங்கு படப்பிடிப்பை முடிக்கும் படக்குழு சென்னை திரும்புகிறதாம். அதன் பின்னர் சென்னை, ஐதராபாத் மற்றும் முமபை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து சிறு இடைவெளிகளில் படம்பிடிக்க உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்