நாளை முதல் 'விஜய்68 'பட அப்டேட்... தயாரிப்பாளர் தகவல்
திங்கள், 23 அக்டோபர் 2023 (16:36 IST)
லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் விஜய்68. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த மாதம் முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் இப்போது விஜய் 68 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட படக்குழு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியொவுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துக் கொடுத்துள்ளார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் விஜய் 68 பட தயாரிப்பாளார் அர்ச்சனா கல்பாத்தி இன்று தன் டுவிட்டர் தளத்தில், ஏற்கனவே கூறியதுபோல் விஜய்68 பட அப்டேட் நாளை முதல் தொடங்கும்.
இப்படத்தின் பூஜை சம்பந்தமான வீடியோ நாளை மதியம் 12.05 மணிக்கு வெளியிடப்படும் அதில், இப்படத்தில் இடம்பெற்ற படக்குழுவினர் பற்றிய தகவல் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.