தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், காதலும் கடந்து போகும், கவண், வானம் கொட்டட்டும், கொம்பு வைச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில், விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.
இப்படத்தில் நடித்தது குறித்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பெரிய ஸ்டார், பெரிய டீம் என்பதால் இப்படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் எலிசாவாக நான் சில காட்சிகளில் மட்டுமே நடித்தேன். மடோனாவாக நடிக்கவில்லை என்று விமர்சிக்கின்றனர்.