கன்னட மொழி பற்றி இனி வாயே திறக்கக் கூடாது! - கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

Prasanth K

ஞாயிறு, 6 ஜூலை 2025 (09:06 IST)

சமீபத்தில் கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், கன்னடம் குறித்து அவர் பேசுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான படம் தக் லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், கன்னட மொழி தமிழில் இருந்து வந்ததாக பேசியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரது தக் லைஃப் படம் அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மன்னிப்பு கேட்க பலரும் கோரிய நிலையில் கமல்ஹாசன் அதை மறுத்துவிட்டார்.

 

இதற்கிடையே கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியவை கன்னடர்களை வேதனக்குள்ளாக்கியதாகவும், இனி கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவிக்க தடைவிதிக்கப்பட வேண்டும் என்றும் கன்னட இலக்கிய துறை தலைவர் மகேஷ் ஜோஷி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த பெங்களூர் நகர சிவில் மற்றும் செசன்சு நீதிமன்றம், கன்னட மொழியை விட மற்ற மொழி சிறந்தது என்பது போன்ற கருத்துகளை கூறுவது, அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவது. அறிக்கைகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றிற்கு கமல்ஹாசனுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் கன்னட மொழி, இலக்கிய, கலாச்சாரத்திற்கு எதிராக பேசுவதற்கும் கமல்ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 30ம் தேதி ஒத்திவைத்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்