தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சற்று முன்னர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது
வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் இதனை அடுத்து இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாகவும் போனிகபூர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.