அமிதாப் பச்சனின் ஜூண்ட் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (10:45 IST)
அமிதாப் பச்சன் நடிப்பில் இயக்குனர் நாகாரஜ் மஞ்சுளே இயக்கியுள்ள ஜுண்ட் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்றி மற்றும் சாய்ராட் ஆகிய படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நாகராஜ் மஞ்சுளே. இந்திய சினிமா உருவாக்கிய தலித் இயக்குனர்களில் முக்கியமானவராக பேசப்படும் நாகராஜ் மஞ்சுளே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் ஜூண்ட் என்ற படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார்.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பட ரிலிஸ் தாமதமான நிலையில் இப்போது மார்ச் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்