''வலிமை'' அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் - தயாரிப்பு நிறுவனம்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (16:47 IST)
வலிமை திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இப்படம் சாதனை படைக்கும் எனப் பிரபல தயாரிப்பு   நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் மதுரை சென்னை கோவை உள்பட பெருநகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் ‘வலிமை’ திரைப்படம்தான் திரையிடப்பட உள்ளது.

தமிழ் திரையுலகில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திற்கு இல்லாத வகையில் அஜித்தின் வலிமை படம்   ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இ ந் நிலையில், அஜித்தின் விஸ்வாசம் , டாக்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள               KJR Studios நிறுவனம்            வலிமை                                படம் குறித்து தங்களின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது.
 
அதில், வலிமை படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஓபனிங்கா அமையவுள்ளது. இப்படம் அனைத்து  முந்தைய சினிமா ரெக்கார்டுகளையும் முறியடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால், அஜித் ரசிகர்கள் நாளைய வலிமை திருவிழாவிற்குத் தயாரிவிட்டனர். இனி கொண்டாட்டம்தான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்