பிறந்த நாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அமலாபால்!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (18:02 IST)
பிறந்தநாளில் பிரபல நடிகை அமலாபால் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 
 
தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் அமலாபால் என்பதும் தற்போது அவர் பிஸியான நடிகையாக தமிழ் மலையாளம் தெலுங்கு திரையுலகில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இன்று தொடங்கி உள்ளதாக அமலாபால் தெரிவித்துள்ளார். இன்று அவர் தனது 30வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமலாபால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் குறைந்த பட்ஜெட்டில் மலையாளத் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது, அவரது முதல் தயாரிப்பு திரைப் படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்