அண்ணாத்த படத்தின் உரிமையைப் பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம்!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:34 IST)
அண்ணாத்த படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.

தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள இந்த படத்தின் வியாபாரத்தை இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தமிழக திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவான பேட்ட படத்தையும் உதயநிதிதான் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்