தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா எம் ஜி ஆர் மகன்? திடீர் முடிவெடுத்த தயாரிப்பு நிறுவனம்!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:04 IST)
எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினி முருகன்’ ’சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிய அடுத்த படம் ’எம்ஜிஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு எல்லா படங்களின் ரிலிஸும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் திறக்கப்பட்ட போதும் போதுமான திரைகள் கிடைக்காததால் ரிலிஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்னும் 6 மாத காலத்துக்கு பெரிய படங்களின் ரிலீஸ் வரிசையாக இருப்பதால் ஓடிடியில் எம் ஜி ஆர் மகன் படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்களாம். அதையொட்டி தீபாவளிக்கு ஓடிடியில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்