வட இந்தியக் கலையுலகம் ஆண்மான்களை ஆதரிப்பதில்லை: வைரமுத்து

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:03 IST)
வட இந்தியக் கலையுலகம் ஆண்மான்களை ஆதரிப்பதில்லை
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் அவர்கள் தனக்கு வந்த வாய்ப்புகளை பிரபலங்கள் தடுத்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தன்னுடைய பாலிவுட் வாய்ப்பையும் ஒருசில கும்பல் தடுப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது 
 
ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஒரு சில பாலிவுட் படங்களில் மட்டுமே பணிபுரிந்தார் என்பதும், அவருக்கு ஆஸ்கார் விருது கூட பாலிவுட் படம் ஒன்றினால் தான் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தாலும் அந்த வாய்ப்புகளை ஒரு சிலர் தடுத்தார்கள் என்பது இப்போதுதான் அவருடைய பேட்டியில் இருந்து தெரிய வருகிறது 
 
இந்த நிலையில் ஏஆர் ரஹ்மானின் இந்த பேட்டி குறித்து கருத்து கூறிய கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது
 
அன்பு ரகுமான்! 
@arrahman
 
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்; 
அரிய வகை மான்.
உங்கள் எல்லை 
வடக்கில் மட்டும் இல்லை

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்