ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

Prasanth K

ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (12:18 IST)

ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதில் ரஜினியின் கூலி பேட்ஜ் நம்பர் 1421 தான் தற்போது பேச்சுப்பொருளாகியுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்டு 14 வெளியாக உள்ளது கூலி. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் ஆமிர் கான், நாகர்ஜூனா, உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் வெளியானபோதே அதில் ரஜினியின் கூலி பேட்ஜ் நம்பர் 1421 என்ற காட்டப்பட்டிருந்தது. அது ரஜினிக்கு சம்பந்தப்பட்ட நம்பரா என பல பேச்சுகள் நிலவி வந்தது.

 

இந்நிலையில் அதுகுறித்து லோகேஷ் கனகராஜே உண்மையை உடைத்து பேசியுள்ளார். அதில் அவர் “கூலி பேட்ஜ் நம்பர் 1421 என்று இருப்பதற்கு எதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கிறதா என ரஜினி சார் என்னிடம் கேட்டார். அதற்கு நான், அது என் அப்பா பஸ் கண்டக்டராக வேலை பார்த்தபோது வழங்கப்பட்ட பேட்ஜ் நம்பர். அவரை நினைவுக்கூறும் வகையில் அந்த நம்பரை பயன்படுத்தினேன் என சொன்னேன். அதை கேட்ட ரஜினி சார் மகிழ்ச்சியும், ஆச்சர்யமுமாக “உங்கெ அப்பா பஸ் கண்டேக்டர்ன்னு என்கிட்டே சொல்லவே இல்லையே?” என்று கேட்டார். அது எனக்கு மறக்க முடியாத தருணம்” எனக் கூறியுள்ளார்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஆரம்ப காலத்தில் சினிமாவில் வருவதற்கு முன் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்