தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் மதன்பாப் நேற்று காலமான நிலையில், இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள், பெரிய திரையுலக பிரபலங்கள் யாரும் வராதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மதன்பாப் கடைசியாக சண்முக பாண்டியன் நடித்த 'கொம்புசீவி' திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், கதாநாயகன் ஷண்முக பாண்டியன் மட்டுமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மதன்பாப் உடல் வைக்கப்பட்டிருந்த வீடு, பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பிரபலங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டதாக ரசிகர்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.
சமீபத்தில், மற்றொரு குணச்சித்திர நடிகரான கிங்காங்கின் மகள் திருமணத்திற்கும் பிரபலங்கள் யாரும் வரவில்லை என்று அதிருப்தி ஏற்பட்ட நிலையில், தற்போது மதன்பாப் மறைவின் போதும் இதே நிலைமை நீடிப்பது, திரையுலகில் சிறிய நடிகர்களின் இன்ப துன்பங்களில் பெரிய நடிகர்கள் யாரும் கலந்துகொள்வதில்லை என்பதையே காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இது தங்களுக்கு மன வலியை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.