ஒரு பூ கிளையிலேயே தூக்கிட்டுக் கொள்வது எத்துணை பெரிய சோகம்: விஜய் ஆண்டனி மகள் குறித்து வைரமுத்து..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (10:24 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது சோகமான முடிவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் மீராவின் தற்கொலை கொடுத்து கூறி இருப்பதாவது:
 
கொலை என்பது
மனிதன் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
 
தற்கொலை என்பது
சமூகத்தின் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
 
விஜய் ஆண்டனி
மகளின் தற்கொலை
சமூகத்தை எந்தப் புள்ளியில்
எதிர்க்கிறது என்பதைக்
கண்டறிந்து களைய வேண்டும்
 
ஒரு பூ
கிளையிலேயே
தூக்கிட்டுக் கொள்வது
எத்துணை பெரிய சோகம்
 
வருந்துகிறேன்
 
ஒரு குடும்பத்தின்
சோகத்தைப் பங்கிட்டு
என் தோளிலும்
ஏற்றிக்கொள்கிறேன்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்