ரொம்ப நார்மலான பொண்ணுதான்.. நம்பவே முடியவில்லை.. விஜய் ஆண்டனி மகளின் டீச்சர் பேட்டி..!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (16:25 IST)
விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்க அவரது ஆசிரியை வந்திருந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது ’விஜய் ஆண்டனியின் மகள் மீரா ஒரு நார்மலான பொண்ணு தான், எந்தவிதமான  தற்கொலைக்கான அறிகுறியும் அவரிடம் தெரியவில்லை. 
 
படிப்பு சுமாராக படிப்பார் என்றாலும் அவர் போல்டான பெண். எங்களால் நம்பவே முடியவில்லை, எப்படி அவர் இந்த முடிவை எடுத்தார் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று கூறினார்
 
 மேலும் பள்ளியை பொருத்தவரை அவருக்கும் பள்ளிக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் இது எப்படி நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறினார். 
 
கண்ணீருடன் அவர் விஜய் ஆண்டனி மகள் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்